13-வது மாடியில் இருந்து விழுந்த கிரேன்… பறிபோன 21 வயது உயிர்… பில்டர் பேரை சொன்னதும்… FIR போட மறுப்பு… நீதி கேட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்… வைரலாக வீடியோ…!

By Visaka on ஆடி 17, 2026

Spread the love

மும்பை மீரா ரோடில் உள்ள ஜேபி இன்ஃப்ரா கட்டுமான தளத்தில், 13-வது மாடியில் இருந்து கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 வயது இளைஞரான முஜம்மில் கோக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூவர் காயமடைந்ததுடன், பல வாகனங்களும் சேதமடைந்தன. இந்த விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி உயிரிழந்த இளைஞரின் தந்தை காஷிகாவ்ன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகாரில் கட்டுமான நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டதால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய (FIR) மறுத்து தங்களை நான்கு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்ததாக அவரது தந்தை கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.

https://www.instagram.com/p/Da3mlwax5aY/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

   

காவல்துறையின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் அப்பகுதி பொதுமக்களும் காஷிகாவ்ன் காவல் நிலையத்தின் முன்பு திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நீதி கிடைக்க காவல்துறை ஆணையர் தலையிட வேண்டும் என்றும், தவறிய பட்சத்தில் இந்த விவகாரத்தை பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப் போவதாகவும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர். கிரேன் செயலிழந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், கட்டுமான நிறுவனத்தின் அப்பட்டமான அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டி, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.