திடீர் மரணம்… திமுகவின் மூத்த புள்ளி வரதராஜன் காலமானார்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்…!

By Nanthini on கார்த்திகை 5, 2026

Spread the love

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ வரதராஜன் (86) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த மூன்று மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. 1989 முதல் 1991 வரை சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றிய இவர், திமுகவின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக செனட் உறுப்பினர் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது மறைவிற்கு அப்பகுதி மக்களும் கட்சித் தொண்டர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.