BREAKING: அதிமுகவுக்கு பேரதிர்ச்சி…. கொங்கு முதல் தென் மாவட்டம் வரை மொத்தமா அவுட்… தவெகவில் இணைந்த EX MLA-க்கள்…..!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவரும், கடலூர் மாவட்டத்தின் முக்கிய முகமுமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே அமைச்சர் N.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தவர் முருகுமாறன்.

அவருடன் சேர்த்து, அதிமுகவிலிருந்து விலகிய சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தென் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த இந்த முக்கிய நிர்வாகிகளின் வருகை தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ள அதேவேளையில், அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.