போன், டிவி, பிரிட்ஜ் எல்லாமே பாதி விலைக்கு வாங்கலாம்.. அதிரடி விற்பனையை தொடங்கிய Flipkart.. ரெடியா இருங்க மக்களே..!

By Nanthini on ஆடி 10, 2025

Spread the love

ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது அமேசான் சிறப்பு விற்பனையை தொடர்ந்து தற்போது பிளிப்கார்டு நிறுவனமும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. Flipkart GOAT விற்பனை ஜூலை 12 முதல் தொடங்குகிறது. ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி சலுகைகள் கிடைக்கும். இதன் காரணமாக விலையுயர்ந்த பொருட்களை நீங்கள் மிக குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். Flipkart பிளஸ் பைனர்களுக்கு இந்த விற்பனை 24 மணி நேரத்திற்கு முன்பே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது ஆக்சஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிஎப்சி வங்கி ஆகிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். Samsung galaxy S24 தள்ளுபடிக்கு பிறகு 50 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும். HP மடிக்கணினிகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் டிவி, ஏசி, பிரிட்ஜ் ஆகிய பொருள்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி சலுகையை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளுங்கள்.