ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். இவரது தந்தை பைவ் ஸ்டார் கல்யாண் திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் மியூசிக் லேபில் உரிமையாளர் ஆவார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் ஹரிஷ் கல்யாண். 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண்.

அடுத்ததாக பொறியாளன், வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆக வெற்றி பெற்று பிரபலம் அடைந்தார் ஹரிஷ் கல்யாண். அதன் மூலம் நல்ல கதையம்சம் கொண்ட சினிமா வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. 2018 ஆம் ஆண்டு பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் ஹரிஷ் கல்யாண்.
தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மண பெண்ணே, பார்க்கிங் தற்போது லப்பர் பந்து ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் தனது மனைவியை பற்றி முதன்முதலாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் கூறியது என்னவென்றால், என் மனைவிக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சினிமா அந்த அளவுக்கு தெரியாது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து ஜெஸ்ஸி எப்படி இருப்பாங்க அந்த மாதிரி தான் சினிமா அப்படின்னு எல்லாம் அவங்க பேமிலில பார்த்தது கிடையாது. கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய சினிமா பாக்குறாங்க. என்னோட படம் மட்டும் இல்ல எல்லா படமும் பார்ப்பாங்க. பார்த்துட்டு ஒவ்வொரு படத்துல உள்ள ஃபீட்பாக்ஸ் என்னோட படத்துல உள்ள ஃபீட்பேக்ஸ் எல்லா இப்போ நல்லா இம்ப்ரூவ் ஆகி எனக்கே ஐடியா கொடுப்பாங்க என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
