Connect with us

அன்றும் இன்றும் என்றும்… பாடல் வரிகளில் வாழும் கவிஞர் வாலி… வாங்கிய முதல் சம்பளம் எவ்ளோ தெரியுமா…?

CINEMA

அன்றும் இன்றும் என்றும்… பாடல் வரிகளில் வாழும் கவிஞர் வாலி… வாங்கிய முதல் சம்பளம் எவ்ளோ தெரியுமா…?

 

திரை உலகைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்றால் கதை கதையில் நடிப்பவர்கள் மற்றும் படத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒளிப்பதிவு என ஒவ்வொன்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்.

எவ்வளவுதான் நாயகர்களும் நாயகிகளும் தங்கள் திறமையை வெளிக்காட்டி நடித்தாலும் படத்தின் பாடல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த ப் பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியர்கள் என்றும் தங்களின் வரிகளால் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இடம் பிடிப்பார்கள்.

   

அப்படி அன்றும் இன்றும் தனது பாடல் வரிகளால் ரசிகர்களிடையே நிலைத்து நிற்கும் ஒருவர் தான் கவிஞர் வாலி. 1958 ஆம் வருடம் வெளியான அழகர்மலைக் கள்வன் என்ற திரைப்படத்திற்காக வாலி தனது முதல் பாட்டை எழுதினார். அதன் பிறகு திரை உலகில் நான்கு தலைமுறையாக வந்த நடிகர் நடிகைகளுக்கு வாலி பாடல் எழுதிக் கொடுத்துள்ளார்.

கவிஞர் வாலி

அவ்வகையில் சுமார் 15,000 பாடல்களை வாலி எழுதியுள்ளார். அவரது கவித்திறனை பாராட்டி பத்மஸ்ரீ விருதும் தேசியகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டது. அதேபோன்று பாரத விலாஸ் திரைப்படத்திற்காக அவர் எழுதிய இந்திய நாடு என் வீடு என்ற பாடலுக்கு அவருக்கு தேசிய விருது வழங்க அரசு முன் வந்தது. ஆனால் அதனை வாலி ஏற்க மறுத்துவிட்டார்.

எத்தனையோ பாடல்களை எழுதி லட்சக்கணக்கில் வாலி சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அவர் முதல் முதலில் வாங்கிய சம்பளம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. தனது முதல் சம்பளமாக வாலி 75 ரூபாயை வாங்கியுள்ளார்.

author avatar
indhuramesh
Continue Reading
To Top