சினிமாவில் ஓஹோன்னு வரக்கூடிய நடிகை.. பாலாவின் படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமா பக்கம் வரல.. பகீர் கிளப்பிய பிரபலம்..!!

By Priya Ram

Updated on:

பிரபல நடிகையான பூஜா ஜேஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு அஜித்துடன் இணைந்து அட்டகாசம் படத்தில் நடித்தார். பூஜாவுக்கு ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. உள்ளம் கேட்குமே திரைப்படத்தில் பூஜா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

   

அந்த படத்தில் இடம்பெற்ற ஓ மனமே ஓ மனமே என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதனை தொடர்ந்து பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம்போ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பூஜா நடித்தார். கடைசியாக ஆர்யாவுடன் இணைந்து பூஜா நடித்த நான் கடவுள் படம் ஹிட்டானது.

அந்த படத்தில் கண் தெரியாத பெண்ணாக பிச்சை எடுக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். சமீபத்தில் பத்திரிக்கையாளரான கோடங்கி என்பவர் ஒரு பேட்டியில் கூறியதாவது, நான் கடவுள் படத்திற்கு பிறகு நடிகை பூஜா தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. அவர் என்னிடம் நிறைய பேசியிருக்கிறார்.

நிறைய விஷயங்களை கூறியிருக்கிறார். நான் கடவுள் படத்தில் நடித்த பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இயக்குனர் பாலா பற்றி நிறைய கூறியிருக்கிறார். நான் கடவுள் படத்தில் நடித்த பிறகு அவர் மன உளைச்சலால் வேறு எந்த சினிமா பக்கமும் வரவில்லை. பாலா போலவே மனிதர்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கும். எல்லாவற்றையும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Filmibeat Tamil (@filmibeattamil)

author avatar
Priya Ram