தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமையின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர்க்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட எம் ஜி ஆர் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் எம்ஜிஆர் படங்களில் சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகள், ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆர் படங்கள் வெளி வந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழுச்சியில் இருந்தார்.
தன்னை ஆதரித்து வெற்றி நாயகனாக மாற்றிய தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். அதேபோல் சினிமாவில் நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு கிடைக்கும் உணவு போலவே எல்லா ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பியவர்.
எம்ஜிஆர் புகழின் உச்சிக்கு சென்றபோது தயாரிப்பாளர்களையும் மீறி அவரே முடிவெடுக்கும் இடத்தில் இருந்தார். அப்போது தனது சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு கிடைக்கும் உணவைப்போலவே கடைநிலை ஊழியர் வரைக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர். அதேபோல் ஒருநாள் ஷூட்டிங்கில் 170 பேர் சாப்பிட வேண்டும். ஆனால் முதலில் 120 பேர் மட்டுமே சாப்பிடுவதற்கான உணவு வந்திருந்தது. அந்தப் பந்தியில் எம்ஜிஆர் அமர்ந்திருந்தார்.
அப்போது படக் குழுவினர் ஐயா இப்போ 120 பேர் சாப்பிடட்டும் இவங்க சாப்பிட்டு முடிகிறதுக்குள்ள மீதி 50 சாப்பாடு வந்துரும் அவங்க சாப்பிடுவாங்க என்று கூறினர். உடனே பந்தியிலிருந்து எழுந்து விட்டார் எம்ஜிஆர். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து ஏன் அய்யா சாப்பிடாமல் எழுந்து விட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு எம்ஜிஆர் என்னுடைய கொள்கை அனைவருக்கும் சமமான சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பது தான். இப்போது நான் சாப்பிட்டு போய்விட்டால் அடுத்த 50 பேருக்கு என்ன சாப்பாடு கிடைக்கும் என்று தெரியாது. அடுத்து 50 பேருக்கும் சாப்பிடும்போது நான் இருந்தால் எனக்கு வைக்கும் சாப்பாட்டை அவர்களுக்கும் பரிமாறுவார்கள் என்று கூறியிருக்கிறார். எத்தனை தொலைநோக்கு சிந்தனையுடன் மக்கள் நலனுக்காக யோசித்து நடப்பவர் எம்ஜிஆர் என்பது இதிலிருந்து தெரிகிறது.