எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்ஏ சந்திரசேகர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கின்றார். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிக வசூலையும் செய்திருக்கின்றது.
40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்து வரும் எஸ்ஏ சந்திரசேகர் தற்போது பல திரைப்படங்களில் சீரியல்களிலும் நடித்து வருகின்றார். மேலும் youtube சேனல் ஒன்று தொடங்கி அதில் பல வீடியோக்களை பகிர்ந்து வருகின்றார். சமீப காலமாக இவருக்கும் இவரது மகனான நடிகர் விஜய்க்கும் சில பிரச்சனைகள் இருந்தது. விஜய் பெயரை பயன்படுத்தி அரசியலில் ஈடுபடுவதாக தனது தந்தை மீது விஜய் கோபத்தில் இருந்தார்.
அதை தொடர்ந்து இருவரும் சமாதானம் ஆகிவிட்டார்கள். இது தொடர்பான புகைப்படம் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. பலரும் பலவிதமாக விஜயை விமர்சித்து வந்த நிலையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகர் விஜய் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இன்று நடிகர் விஜய் தனது 50-வது நாள் கொண்டாடி வருகின்றார். தற்போது டாப் நடிகராக இருக்கும் விஜய் ஆரம்பத்தில் தனது தந்தை இயக்கத்தில் வெற்றி என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார்.
அதன் பின்னர் ஏகப்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்கியதும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தான். தனது மகனை அறிமுகம் செய்தது மட்டுமில்லாமல் பல பிரபலங்களிடம் அழைத்துச் சென்று இவருக்கு வாய்ப்பு கேட்டு நடிக்க வைத்தார். அதற்கு பின்னர் தனது திறமையால் நடித்து முன்னுக்கு வந்திருந்தாலும் ஆரம்ப புள்ளியாக இருந்தது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய், இந்த பிறந்தநாள் உனக்கு ஒரு சிறப்பான பிறந்த நாளாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உன்னால் இந்த தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் குறிப்பாக தாய்மார்களுக்கு ஒரு செல்லப் பிள்ளையாக, இளைஞர்களுக்கெல்லாம் அண்ணனாக, தம்பியாக, தோழனாக, நண்பனாக வாழ வேண்டும் என்று உன்னை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram