தளபதி விஜயின் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல இயக்குனர்!… இந்த வேடத்திலா?… வைரலாகும் புகைப்படம் இதோ!…

தளபதி விஜயின் திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல இயக்குனர்!… இந்த வேடத்திலா?… வைரலாகும் புகைப்படம் இதோ!…

தளபதி விஜயின் திரைப்படத்தில் பிரபல இயக்குனரான மிஷ்கின் நடித்த புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் தற்பொழுது உருவாகி வருகிறது. இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு போட்டியாக தல அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் வெளியாகிவுள்ளது.

வாரிசு திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வைரலானது. இதைத் தொடர்ந்து படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் நாகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளார்.

 

வாரிசு திரைப்படம் ரிலீஷான பின்னர் இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். சமீபத்தியின் தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜையும் நடைபெற்றது. நடிகர் விஜயின் திரைப்படத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று ‘யூத்’.

இத்திரைப்படம் 2002ல் வெளியானது இத்திரைப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். யூத் திரைப்படத்தில் இயக்குனர் வின்சன் செல்வாவுடன் துணை இயக்குனராக மிஸ்கின் பணிபுரிந்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் துணை இயக்குனராக பணி புரிந்த மிஸ்கின் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…..

Begam