”அவர்கள் தான் மிகப்பெரிய தூண்கள்”… உழைப்பாளிகளுக்கு சலியூட் செய்த பிரபல காமெடி நடிகர் பாலசரவணன்… வைரலாகும் வீடியோ….

By Begam

Published on:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் பால சரவணன். இதைத் தொடர்ந்து இவர் 2013ல் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார்.

   

பின்னர் திருடன் போலீஸ், டார்லிங், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்த ரசிகர்களிடைய பிரபலமானார். குறிப்பாக திருடன் போலீஸ் மற்றும் டார்லிங் படத்தில் இவரது நகைச்சுவை பெரிய வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்தார்.

தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் பால சரவணன். சமூகவலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் பால சரவணன்.

இவர் தற்பொழுது ”படப்பிடிப்பு என்பது மிகவும் அழகான கலை. இதில் வேலை செய்யும் லைட் மேன் அண்ணன்கள் மிகப்பெரிய தூண்கள் அவர்களுக்கு சல்யூட் செய்வதாக” வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Balasaravanan (@actor_balasaravanan)