இதெல்லாம் நடிகர் பஹத் பாசிலின் அப்பா இயக்கிய தமிழ் படங்களா?… அட இவ்ளோ நாள் தெரியாம போச்சே!

By vinoth on ஜூலை 31, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாக்களில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்த கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் பகத் பாஸில். இவர் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அந்தத் திரைப்படம் வெற்றி அடைந்ததற்கு முக்கிய காரணமே இவரின் வில்லத்தனமான நடிப்பு என்று கூறலாம். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக இவர் நடித்துள்ளார். இந்தியா முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பஹத் பாசிலின் தந்தை பாசில் ஒரு முன்னணி இயக்குனர் ஆவார். 80 கள் மற்றும் 90 களில் அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் பாசில் முதல் முறையாக தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

   

அந்தப் படத்தைத் தொடர்ந்து சத்யராஜ் நடித்த பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேலை, கற்பூர முல்லை, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒருநாள் ஒரு கனவு உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

   

இவர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு உருவான கையேதும் தூரத் என்ற படத்தில்தான் பஹத் பாசில் நடிகராக அறிமுகமானார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதனால் அடுத்த ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் பஹத் பாசில் வெளிநாட்டுக்கு சென்று நடிப்பு சம்மந்தமான படிப்பு ஒன்றை படித்து திரும்பினார். அதன் பிறகுதான் அவர் நடிப்பில் வெளியான படங்கள் வரிசையாக ஹிட்டாகத் தொடங்கின.

 

கடைசியாக 2011 ஆம் ஆண்டு லிவிங் டுகெதர் என்ற படத்தை இயக்கினார் பாசில். அதன் பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.