விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் , விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 51 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள், 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தற்பொழுது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இறுதியாக வைல்ட் கார்டு என்ட்ரியான கானா பாலா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து, இந்த வாரத்தின் தலைவராக கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் தலைவராக இருந்த தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ஏற்கனவே மூன்று வைல்ட் கார்டு வரப்போகிறார்கள் என பிக் பாஸ் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் டாஸ்க்குகளின் வடிவத்தில் மூன்று பூகம்பங்கள் இந்த வீட்டை தாக்கும். நீங்க நாமினேட் செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய Ex கண்டஸ்டன்ஸ் உங்க எல்லாரோடையும் கடினமா போட்டி போட இந்த பிக் பாஸ் வீட்டுக்குள்ள வராங்க.
இந்த வாரம் வெளியே அனுப்பப்படும் நபர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கும் . இந்த பிக் பாஸ் வீட்டின் 3 டாஸ்க்குகளிலும் வெற்றி பெற்று வீட்டிலிருக்கும் ஹவுஸ்மேட்ச்சோட நிலையை சேப் ஆகணுமா? இல்ல எக்ஸ் கண்டஸ்டன்ஸ்க்கு சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்கணுமாங்குறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க’ என்று கூறுகிறார். இதனைக் கேட்ட ஹவுஸ்சமேட்கள் அதிர்ச்சியில் திருதிருவென முழிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…