வித்தியாசமான முறையில் நடைபெறும் எவிக்சன்!!… தானாக வெளியேறும் போட்டியாளர்கள்!!… ரசிகர்களின் ஆவலை அதிகரித்த ப்ரோமோ இதோ!…

வித்தியாசமான முறையில் நடைபெறும் எவிக்சன்!!… தானாக வெளியேறும் போட்டியாளர்கள்!!… ரசிகர்களின் ஆவலை அதிகரித்த ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் ப்ரமோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இதில் கலந்துகொண்ட 21 போட்டியாளர்களில் தற்பொழுது 10 போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

68 நாட்களுக்கு மேல் கடந்த இந்த நிகழ்ச்சியில் இறுதி வெற்றியாளர் யார் என அறிய ரசிகர்களுடன் ஆவலாக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதை தொடர்ந்து இந்த வாரம் மணிகண்டன், ஜனனி, ஏடிகே இவர்கள் மூவரில் யார் வெளியேறுவார்கள் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் கமலஹாசன் ‘இந்த மூவரில் யார் வெளியேறுவார்கள்? என்று நினைக்கிறீர்கள்’ என அந்த மூவரையும் பார்த்து கேட்கிறார்.

அதற்கு மூவருமே ‘நான்தான் போவேன்’ என கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து கமல் எவிக்ஷன் கார்டை உள்ளே வைத்துவிட்டு, ‘இனி இதெல்லாம் தேவையில்லை, குடவோலை முறையில் யார் தேர்வு செய்யப்படுகின்றீர்களோ. அவர்கள் வெளியே வந்து விடுங்கள்’ எனக் கூறுகிறார். இந்நிலையில் ஏடிகே சென்று, அதிலிருந்து ஒருவரின் பெயரை எடுக்கிறார். அது யாராக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….

Begam