“40 வயதிலும் அழகு கூடிக்கிட்டே போகுது”…. க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் நடிகை திரிஷா…..!!!!!

“40 வயதிலும் அழகு கூடிக்கிட்டே போகுது”…. க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் நடிகை திரிஷா…..!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் திரிஷா தற்போது க்யூட்டான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Arun Prasath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@arunprasath_photography)

Nanthini