3 ஆண்டுகள் பழமையான மின்சாரக் கார் ஒன்றை பார்க் செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக வாகனம் தானாகவே மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் சீறிப் பாய்ந்து, அருகிலிருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரை நிறுத்துவதற்கு பிரேக் பிடித்தபோதும் அது இயங்கவில்லை என்றும், ஓட்டுநரை மீட்டபோது அவர் படுகாயமடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் அக்கம் பக்கத்து வீட்டின் கேட் மற்றும் இரண்டு கார்கள் பலத்த சேதமடைந்து, கார் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அனுபவமிக்க ஓட்டுநர் இயக்கியும் நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு, தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்தவிதமான தொழில்நுட்ப விளக்கமோ, விசாரணை அறிக்கையோ அல்லது நிவாரணமோ வழங்கவில்லை என உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார். காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் நடவடிக்கை, சட்ட சிக்கல்கள் மற்றும் அண்டை வீட்டாருக்கு ஏற்பட்ட ரூ. 7-8 லட்சம் சேதத் தொகையை உரிமையாளரே ஏற்றுக்கொண்டுள்ளார். ரூ. 27.5 லட்சம் மதிப்புள்ள கார காப்பீட்டுத் தொகையில் ரூ. 19.6 லட்சம் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் இழப்பீடுகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை.
https://twitter.com/AbhishekJalan26/status/2106285625116701127/video/1
மின்சார வாகனங்களை வாங்குவதற்கு முன்பாக, அந்நிறுவனத்தின் சேவை நெட்வொர்க், வாடிக்கையாளர் குறைதீர்க்கும் முறை மற்றும் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்பான விசாரணை அணுகுமுறை ஆகியவற்றை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற தானியங்கி வேகக் கட்டுப்பாடு இழப்பு மற்றும் பிரேக் கோளாறு சம்பவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருந்தால் அது குறித்து பகிர்வது மற்ற நுகர்வோருக்கு உதவியாக இருக்கும்.
