1.75 லட்சம் அபேஸ்!… முதல் கோணல்.. முற்றிலும் அம்பேல்!… சைட் பிசினஸ் செய்ய ஆசை… பணத்தை ஆட்டைய போட்ட டிரைவர்… கதறும் இன்ஜினியர்…!!

By Gayathri on ஐப்பசி 4, 2026

Spread the love

கூடுதல் வருமானம் ஈட்ட நினைத்த ஒரு பொறியாளருக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பலரும் தங்களது வழக்கமான வேலையைத் தாண்டி, பகுதிநேரத் தொழில் மூலம் சம்பாதிக்க விரும்புகின்றனர். அப்படித்தான் ஒரு பொறியாளர் தனது சேமிப்பான ரூ.1.75 லட்சத்தை முதலீடு செய்து, வாடகைக்கு விடுவதற்காக ஒரு புதிய இ-ரிக்‌ஷாவை வாங்கியுள்ளார். இதன் மூலம் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும் என அவர் கனவு கண்டார்.

ஆனால், வண்டி வாங்கிய முதல் நாளிலேயே அவரது ஒட்டுமொத்த முதலீடும் பறிபோனதுதான் மிகப்பெரிய சோகம். அந்த இ-ரிக்‌ஷாவை ஓட்டுவதற்காக ஒரு ஓட்டுநரை வேலைக்கு அமர்த்தி அவரிடம் வாகனத்தை ஒப்படைத்துள்ளார். வண்டியை ஓட்டிச் சென்ற அந்த நபர் மாலையில் வருமானம் கொண்டு வருவார் என காத்திருந்த பொறியாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த ஓட்டுநர் திரும்பி வராததால் சந்தேகமடைந்து தேடிய போதுதான், 1.75 லட்சம் மதிப்புள்ள வண்டியுடன் அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

   

தனது இந்த பரிதாப நிலையை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சரியான முகவரி அல்லது பின்புல விசாரணை செய்யாமல் முகம் தெரியாத ஒருவரிடம் எப்படி இவ்வளவு விலையுயர்ந்த வாகனத்தை கொடுத்தீர்கள் என்றும், “படித்த ஒருவரே எப்படி இவ்வளவு முட்டாள்தனமாக செயல்பட்டார்” என்றும் இணையவாசிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.