கர்நாடக மாநிலம் கேடிலா பகுதியில் மின்வாரிய ஊழியராகப் பணிபுரிந்து வந்த ரவி என்ற லைன்மேன், சனிக்கிழமை அன்று பணிநேரத்தில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மிட்டூர் கடியார் பகுதியிலுள்ள பத்ரகோடி கிராமத்தைச் சேர்ந்த ரவி, மின் கம்பியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
ஊரில் யாருக்கு மின்சாரப் பிரச்சினை என்றாலும் ஒரே போன்காலில் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்து சரிசெய்து கொடுக்கும் சுறுசுறுப்பான மற்றும் மக்கள் சேவை குணம் கொண்ட ரவியின் இந்தத் திடீர் மரணம், கேடிலா கிராம மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
