தைரியம் இருக்கா?… பயந்தா ரூ.52,000 காலி…. பேய் வீட்டில் ஒரு இரவு தங்குனா இவ்வளவு பணமா?…. போட்டிக்கு நீங்க ரெடியா…?

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

ஜப்பானில் வயதானவர்களின் மறைவுக்குப் பிறகும், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி இடம்பெயர்வதாலும் கிராமப்புறங்களில் ஏராளமான வீடுகள் யாருமன்றி கைவிடப்பட்டு வருகின்றன. மேலும், கடுமையான வரி விதிப்புகள், சொத்துக்களைப் பராமரிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தனியாக வசித்தவர்கள் இறந்த வீடுகளில் பேய்கள் இருக்கும் என்ற மக்களின் மூடநம்பிக்கை ஆகியவற்றால், இதுபோன்ற வீடுகளை விற்பதோ அல்லது வாடகைக்கு விடுவதோ உரிமையாளர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்நிலையை மாற்றவும், வாங்குபவர்களின் அச்சத்தைப் போக்கவும் ஜப்பானிய வீட்டு உரிமையாளர்கள் ஒரு வினோதமான புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அதன்படி, தற்கொலை, தீ விபத்து அல்லது எதிர்பாராத மரணங்கள் நிகழ்ந்த வீடுகளில் ஒரு இரவு மட்டும் தங்கிச் செல்பவர்களுக்குச் சம்பளமாக தோராயமாக 52 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இப்படி யாராவது ஒரு இரவு அசம்பாவிதம் ஏதுமின்றி தங்கிச் சென்றால், அந்த வீட்டைப் பற்றிய பயம் நீங்கி மற்றவர்கள் அதை வாங்க முன்வருவார்கள் என உரிமையாளர்கள் நம்புகின்றனர்.