Connect with us

என்னது, ஆண் இனமே அழியப் போகுதா?.. எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலையா?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

NEWS

என்னது, ஆண் இனமே அழியப் போகுதா?.. எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலையா?.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பொதுவாகவே மனிதர்களை ஆண்கள் பெண்கள் என்று தீர்மானிப்பது குரோமோசோம்கள் தான். பெண்களுக்கு XX குரோமோசோம்களும், XY குரோமோசோம்களும் உள்ள நிலையில் ஆண் தன்மையை தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள் சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகி உள்ளது. X குரோமோசோம்கள் Y குரோமோசோம்களுடன் இணையும்போது ஆண் குழந்தைகள் பிறக்கின்ற நிலையில் அவற்றின் அழிவினால் வரும் காலங்களில் ஆண் குழந்தைகளை பிறக்காத நிலை ஏற்பட்டு அது இனப்பெருக்க சுழற்சியை உடைக்கலாம் எனவும் ஆய்வில் கூறப்படுகிறது.

   

ஆரம்பத்தில் மனிதனில் உள்ள Y குரோமோசோம்களில் 1438 மரபணுக்கள் இருந்த நிலையில் கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் அவற்றில் 1393 மரபணுக்கள் அழிந்துவிட்டன . தற்போது y குரோமோசோம்களில் 40 மரபணுக்கள் மட்டுமே மிஞ்சு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 11 மில்லியன் ஆண்டுகளில் அவை மொத்தமாக அழிந்து விடும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

   

 

11 மில்லியன் ஆண்டுகள் கழித்து என்ன நடக்கும் என்று விஞ்ஞானிகள் ஸ்பைனி எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்த போது, y குரோமோசோம்கள் முற்றிலும் அழிந்த பின்னர் புதிய வகையான குரோமோசோம்கள் பரிணமித்துள்ளது கண்டறியப்பட்டது. எனவே மனிதர்களிடம் y குரோமோசோம்கள் முற்றிலும் அழிந்த பிறகு புதிய வகை பாலினங்கள் உருவாகும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

author avatar
Nanthini

More in NEWS

To Top