அனந்தபுரம் பகுதியில் உள்ள பிரபல டி.டி.டி. கோவில் கல்யாண மண்டபம் அருகே மதுப்பிரியர்களின் அட்டூழியம் எல்லை மீறிச் சென்றுள்ளது. இங்குள்ள ஸ்ரீலட்சுமி ஒயின் கடை பகுதியில் நான்கு குடிகார நபர்கள் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரான சுங்கண்ணா என்பவரைத் தாக்கியுள்ளனர். நேற்று இரவு நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு ஆளான ஆட்டோ ஓட்டுநர் சுங்கண்ணா, மதுப்பிரியர்களிடம் 10 ரூபாய் கடன் கேட்டுள்ளார். அப்போது, அந்த நபர்கள் சுங்கண்ணாவிடம் ஒரு பெண்ணிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வீண் பழியும்கூறி, அவரைப் பலவந்தமாக ஆட்டோவில் ஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அந்த நான்கு பேரும் சேர்ந்து அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
https://twitter.com/Telugufeedsite/status/2105923160109350984/video/1
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த அராஜகச் சம்பவத்தை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற, அது தற்போது வைரலாகி வருகிறது. டி.டி.டி. கோவில் கல்யாண மண்டபம் போன்ற ஆன்மீக மற்றும் புனிதமான இடத்தின் அருகே இயங்கும் மதுக்கடையால் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டும் பொதுமக்கள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
