‘மாதவன் பையனோட என் பையன ஒப்பிடாதீங்க’… கோபத்தில் கூறிய அமைச்சர் உதயநிதி… என்ன நடந்தது தெரியுமா?…

‘மாதவன் பையனோட என் பையன ஒப்பிடாதீங்க’… கோபத்தில் கூறிய அமைச்சர் உதயநிதி… என்ன நடந்தது தெரியுமா?…

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்பொழுது திரைத்துறையை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இறுதியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், தற்பொழுது எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை அவருடைய தொகுதியில் செய்து வருகிறார். அதேபோல சமீபத்தில் இவருக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.

இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் நடித்து வந்த மாமன்னன் திரைப்படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார், தற்பொழுது இவர் தனது முழு கவனத்தையும் அரசியலிலே செலுத்தி வருகிறார். நடிகர் உதயநிதி 2002ல் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கும் இன்பனிதி என்ற மகனும், தமன்யா என்ற மகளும் உள்ளனர். அரசியல் பிரபலங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தானே. அந்த வகையில் நடிகரும் அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பனிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இது குறித்து இணையத்தில் பல சர்ச்சைகள் உருவாகின. இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ‘அவருக்கு பத்தொன்பது 18 வயதாகிவிட்டது. இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. ஒரு எல்லைக்கு மேல் நானே தலையிட விரும்பவில்லை. இது அவருக்கான சுதந்திரம்’ என்று அந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.அதேபோல இந்த பேட்டியில் ‘விளையாட்டு வீரரான மாதவன் மகன் நிறைய மெடல்  வாங்குகிறாரே’ என்று சொன்னதும் ‘தயவு செய்து என் மகனை மாதவன் மகனுடன் கம்பேர் செய்யாதீர்கள். அவருக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்கிறார்’ என்று கோபமாக பதில் அளித்துள்ளார் உதயநிதி.

Begam