‘டேனியல் அன்னைக்கு காலைல இருந்தே.. டேனியல் பாலாஜி இறந்த அன்று என்ன நடந்தது’.. முதல் முறையாக ரகசியம் பகிரும் டாக்டர்

By Deepika

Updated on:

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க படங்களில் வில்லனாக நடித்தது மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் டேனியல் பாலாஜி. நடிகர் முரளியின் சகோதரரான இவர் தமிழ், மலையாள, தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார். சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த டேனியல் பாலாஜி கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்.

Actor daniel balaji dies of heart attack

48 வயதாகும் இவர் தீடீரென யாரும் எதிர்ப்பாராத நிலையில், மாரடைப்பால் உயிரிழந்தார். ஏற்கனவே ஆஞ்சியோ பண்ணியிருந்த நிலையில் அவர் மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டேனியல் பாலாஜியின் மரணம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, ஆஞ்சியோ செய்தால் எப்படி மாரடைப்பு வரும் என நிறைய பேர் கேட்கின்றனர். ஆஞ்சியோ என்பது அடைப்பை எடுப்பது தான், ஆனால் மாரடைப்பு வரும்.

   
Doctor Arun about daniel balaji death

டேனியல் பாலாஜிக்கு அன்று மதியமே நெஞ்சு வலி வந்துள்ளது, ஆனால் எப்போதும் வலிப்பது தான் என அவர் சாதாரணமாக விட்டுள்ளார். மாலை நேரம் வலி அதிகமாகவும் அவருடைய நண்பர்கள் அழைத்து வந்தார்கள். ஆனால் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. வலி எடுத்தபோதே வந்திருக்க வேண்டும், அப்படி உங்களுக்கு வலி வந்தால் யாரையாவது அழைத்து கொண்டு வாருங்கள், நீங்களாக வாகனம் ஓட்டாதீர்கள். உடல் பரிசோதனை செய்யுங்கள், நல்ல உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

Actor daniel balaji dies of heart attack

நம் இந்தியர்கள் அதிக பேருக்கு இந்த மாரடைப்பு அதிகம் வருகிறது, நாம் தான் முதலில் மருத்துவ பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். டேனியல் பாலாஜி ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர், அவர் இறப்பு கஷ்டமாக உள்ளது என பேசியுள்ளார் மருத்துவர் அருண்.

author avatar
Deepika