வழக்கமா ஞாயிற்று கிழம தானா வெளில போவாங்க…? Eviction Card-ஓடு வந்த கமல்.. அதிர்ச்சியில் விழி பிதுங்கிய போட்டியாளர்கள்…

By Begam on நவம்பர் 25, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 56 நாட்களை நிறைவு செய்துள்ளது.  பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி  வரும் இந்த ஷோவில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தொடர்ந்து 5 வைல்டு கார்டு போட்டியாளர்களும் களமிறங்கினர்.

 

   

வாரம் ஒரு எலிமினேஷன் என தற்போது வரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே  வந்த 5  போட்டியாளர்களையும் ஏற்கனவே இருந்த ஹவுஸ்மேட்கள் எதிரிகளாகவே பார்த்து வந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பிக் பாஸ் அதிரடியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட சென்ற வாரமே பரபரப்பாக ஒளிபரப்பானது.

   

 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன், ‘பிக்பாஸ் வீட்டை பூகம்பம் பெருசா தாக்கியுள்ளது. இதில் நாமினேட் ஆனவங்க எல்லோரும் ஒன்றாக இருங்க’ என்று சொல்ல எல்லோரும் ஒன்றாக இருக்கின்றனர். அப்போது விஷ்ணு ‘எத்தனை பேர் போறாங்க, எத்தினை பேர் வருகிறாங்க ‘என்று கேட்க கமல்ஹாசன் ‘வின்னர் யார்? என்று கூட கேட்பீங்க போல இருக்கே. உடனே எல்லாம் தெரியனும்னா.. இங்கே வந்தால் நல்லா இருக்கும்’ என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து கமலஹாசன் ‘யார் வெளியில் போவாங்க என்று நினைக்கிறீங்க? எனக் கேட்க , பூர்ணிமா ‘மாயா போவாங்க’ என்று சொல்ல, ப்ராவோ நான் தான் போவேன் என்கின்றார். அக்ஷயா ‘என்னையே சொல்ல முடியாது’ என்று கூறுகிறார். இதைக் கேட்ட கமல்ஹாசன் ‘உங்க இஷ்டம் ‘என கூறுகிறார். இவ்வாறு இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…