‘கோரிப்பாளையம்’ பட ஹீரோ விக்ராந்தின் பிள்ளைகளை பாத்திருக்கீங்களா….வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ…..

By Begam

Updated on:

நடிகர் விக்ராந்த் தனது இரு பிள்ளைகளுடன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் தளபதி விஜய். அவரது சித்தப்பா பையன் தான் நடிகர் விக்ராந்த் என நம் அனைவருக்கும் தெரியும். முதலில் விஜயின் தம்பி என பிரபலமடைந்தார். பின்னர் தன்னுடைய  கடுமையான முயற்சியினால் திரையுலகில் முன்னுக்கு வந்தார்.

   

இவர் நடிப்பில் வெளியான ‘கோரிபாளையம்’ திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையக அமைந்தது. இதைதொடர்ந்து அவர் முத்துக்கு முத்தாக, கெத்து, கவண் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விக்ராந்த்தின் தாயார் பிரபல சீரியல் நடிகை ஷீலா. விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விக்ராந்த் பிரபல சீரியல் நடிகை மானஸாவை திருமணம் செய்து கொண்டார்.  சன் டீவியில் ஒளிபரப்பான ‘உதிரி பூக்கள்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் விக்ராந்த். தற்பொழுது தனது இரு மகன்களுடன் விக்ராந்த் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில்  வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….