புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் இருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?…. என்னது இவரா?…. கண்டுபுடிச்சிடீங்களா!….

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடன் இருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?…. என்னது இவரா?…. கண்டுபுடிச்சிடீங்களா!….

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவை தனது கையில் தூக்கி வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நடிகர் கார்த்தி இவரின் தம்பி ஆவார். குடும்பம் முழுவதுமே சினிமா துறையில் பணியாற்றி வருகின்றனர். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

சமீபத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை வாங்கி குவித்ததும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகர் சூர்யா ஜோதிகாவை 2007ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா.. சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது முன்னணி நடிகர்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடிகர் சூர்யாவை கையில் தூக்கி வைத்து இருக்கிறார் . நடிகர் சிவகுமார் ஒருமுறை எம்ஜிஆரை சந்திக்க சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம்  ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…

Begam