2022ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகை யார் தெரியுமா?…. நயன்தாரா, சமந்தாவை ஓரம் கட்டிய திருமணமான நடிகை!….இவர்தானா!…

2022ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகை யார் தெரியுமா?…. நயன்தாரா, சமந்தாவை ஓரம் கட்டிய திருமணமான நடிகை!….இவர்தானா!…

2022ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் டாப் 10 லிஸ்ட் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வருட இறுதியில் சிறந்த திரைப்படங்கள், இந்த ஆண்டின் சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகைகள் என டாப் 10 லிஸ்ட் இணையத்தில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது 2022 அதிகம் இணையத்தில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள் யார் என்பதை குறித்து டாப் 10 லிஸ்ட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

இந்த லிஸ்டில் நயன்தாரா,, சமந்தாவை பின்னுக்கு தள்ளி திருமணமாகி குழந்தை பெற்ற பிரபல நடிகை காஜல் அகர்வால் முதலிடத்தை பிடித்துள்ளார்.

டாப் 10 லிஸ்ட் இதோ….

1. காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டு அழகான ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். தற்போது இவர் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

2.சமந்தா

காத்துவாக்குல ரெண்டு காதல், யஷோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார். சகுந்தலம், குஷி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்

3. ராஷ்மிகா மந்தனா

இவர் நடிப்பில் சீதா ராமம் படம் இந்த ஆண்டு வெளிவந்தது. மேலும் வாரிசு படத்தில் விஜய்யுடன் இனைந்து நடித்துள்ளார்.

4. தமன்னா

இந்த ஆண்டு பிஸியான நடிகைகளில் ஒருவராக தென்னிந்திய வலம் வந்தார்.

5. நயன்தாரா

காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், ஓ2, கோல்ட் ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளிவந்தன.

6. அனுஷ்கா

இவர் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஆனாலும் ரசிகர்களால் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். மேலும் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.

7. பூஜா ஹெக்டே

பீஸ்ட், ஆச்சர்யா, ராதே ஷாயம் என பல திரைப்படங்களில் இந்த ஆண்டு நடித்திருந்தார்

8. கீர்த்தி சுரேஷ்

சாணி காயிதம் படத்தின் மூலம் மிரட்டலான நடிப்பை இந்த ஆண்டு வெளிப்படுத்தினார். சர்காரு வாரி பாட்டா, வஷி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

9. சாய் பல்லவி

கார்கி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். தெலுங்கில் விராட்டா பர்வம் படத்தில் நடித்திருந்தார்.

10. ராகுல் ப்ரீத் சிங்

இவர் நடிப்பில் எந்த ஒரு பெரிய படமும் வெளிவரவில்லை என்றாலும், ரசிகர்களால் அதிகம் தேடப்பட்டு இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளார்.

Begam