இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா?… இவர் இந்திய சினிமாவின் பிரபல பாடகியா?…

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா?… இவர் இந்திய சினிமாவின் பிரபல பாடகியா?…

பிரபல பாடகியான ஸ்ரேயா கோசலின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

சமீப காலமாக வலைதளங்களில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிரபல பாடகியான ஸ்ரேயா கோசலின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி முன்னணி பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக கருதப்படுகிறார். பாலிவுட்டில் ஒளிபரப்பான ‘சரிகமப’ டிவி ஷோ மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி முன்னணி பாடகியாக உயர்ந்தவர். இவர் பாலிவுட்டில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து ‘தேவதாஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாடிய பாடலுக்காக தேசிய விருது மற்றும் பிலிம் பார் விருதும் வழங்கப்பட்டது. தமிழில் இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியது. இதை தொடர்ந்து அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இவர் இதுவரை நான்கு தேசிய விருது, இரண்டு தமிழ் மாநில விருது, 4 கேரள மாநில விருது வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடகி ஸ்ரேயா கோஷல் தனது சிறுவயதிலிருந்து இசைப் பயிற்சியினை எடுத்துக் கொண்டுள்ளார். தற்பொழுது இவர் தனது சிறுவயதில் இசை பயிற்சி செய்யும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam