இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட் குழந்தை யார் தெரியுமா?… இவர் வளர்ந்து வரும் இளம் நடிகர்!… கண்டுபிடிங்க பார்க்கலாம்!…

இந்த புகைப்படத்தில் இருக்கும் க்யூட் குழந்தை யார் தெரியுமா?… இவர் வளர்ந்து வரும் இளம் நடிகர்!… கண்டுபிடிங்க பார்க்கலாம்!…

பிரபல திரைப்பட நடிகர் ஜெயராமின் மகன் நடிகர் காளிதாசின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயராம். இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆழ்வார்கடியான் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் தான் இவரது மகன் காளிதாஸ் ஜெயராம்.

மலையாள நடிகரான காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண்பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகள் போன்ற அந்தோலஜி படங்களில் நடித்துள்ளார். பாவ கதைகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்ட பெற்றது. இதை தொடர்ந்தவர் ‘பேப்பர் போட்’ என்ற வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ், மலையாளம் என 15க்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ளார். சில வெப் சீரியஸ் நடித்து கலக்கி உள்ளார்.

இதன் மூலம் மக்களிடம் நல்ல பிரபலம் அடைந்துள்ளார். நடிகர் காளிதாஸ் டிசம்பர் 14ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற தங்கை மாளவிகா தனது சகோதரரின் சிறு வயது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam