இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?…. இவர் தற்பொழுது ஒரு பிரபல நட்சத்திரம்!… 

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?…. இவர் தற்பொழுது ஒரு பிரபல நட்சத்திரம்!… 

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான பிரியதர்ஷினியின்  சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் பிரபல ஆங்கராக இருந்து வருபவர் டிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் திவ்யதர்ஷினி நீலகண்டன். இவரைப் போலவே இவரது அக்காவான பிரியதர்ஷினியும் சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் தனது தங்கையை போன்றே மிகச்சிறந்த ஆங்கராகவும் வலம் வந்தவர்.

பிரியதர்ஷினிக்கு நடிப்பு மற்றும் டான்ஸ் இரண்டுமே மிக பிடிக்கும். தமிழ் திரைப்படத் துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று தனது நடனத் திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் சீனியர் ஆங்கராக வலம் வந்த இவர்,  நாகம், நாகதேவதா, குற்றவாளிகள் உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கோலங்கள் மற்றும் ரேகா ஐபிஎஸ் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். பிரியதர்ஷினிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் நன்கு தெரியும்.

இவர் ரமணா கிஷோர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தொகுப்பாளினி பிரியதர்ஷினி பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘தாவணி கடவுள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் குழந்தை நட்சத்திரமாக ‘தாவணி கனவுகள்’ படத்தில் நடித்த பொது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam