இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?…. இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்துள்ளாரா?…

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா?…. இவர் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்துள்ளாரா?…

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை நேஹா மேனனின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் குடும்பம் பெண்கள் படும் கஷ்டங்கள் பற்றி எதார்த்தமாக எடுத்துரைக்கப்படுகிறது. இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டுள்ளது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கதாநாயகன் கோபியின் மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா மேனன். இவர் கேரள மாநிலம் சாலக்குடியில் பிறந்தவர். இவருக்கு தற்பொழுது 20 வயது ஆகிறது. இவர் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக ‘பைரவி’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மிக பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.

இதைத் தொடர்ந்து ‘சித்தி 2’ சீரியலில் ராதிகாவுடன் இணைத்து நடித்தார். தற்பொழுது பாக்யலட்சுமி சீரியல் இனியா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார். நடிகை நேஹா தனது instagram பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சீரியல் நடிகை நேஹாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…..

Begam