தமிழ் சினிமா இயக்குனர்களில் IMDb மதிப்பில் டாப் 10 இடத்தைப் பிடித்த இயக்குனர்கள் யார் தெரியுமா?..

By Samrin

Published on:

ஒரு படம் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இயக்குனர்கள் . இயக்குனர்கள் அப்படி ஒரு படத்தை  உருவாக்கி அதை வெளியிடும்போது அப்படத்தில் நடித்த நடிகர் மற்றும்  நடிகைகள் மிகவும் பிரபலமாகின்றனர் .அப்படத்தை இயக்கிய இயக்குனர்கள் அவ்வளவு பெரிதாக மக்கள் மத்தியில் சென்றடைவதில்லை. அப்படிப்பட்ட இயக்குனர்கள் IMDb மதிப்பில் டாப் 10 இடத்தை பிடித்த இயக்குனர்களை பற்றி இதில் காண்போம்.

10 கௌதம் வாசுதேவ் மேனன்:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து என்னை அறிந்தால், நீ தானே என் பொன்வசந்தம் ,விண்ணைத்தாண்டி வருவாயா, பச்சைக்கிளி, முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

9.சங்கர்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சங்கர். இவர் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில்மேன்’  திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து 2.0, நண்பன், எந்திரன், அந்நியன், பாய்ஸ், முதல்வன், ஜீன்ஸ் போன்ற பல படங்களை  இயக்கியுள்ளார்.

8.செல்வராகவன்:

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் ‘காதல் கொண்டேன்’  திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதை தொடர்ந்து  என் ஜி கே, இரண்டாம் உலகம், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

7.பாலா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்  இயக்குனர் பாலா. இவர் ‘சேது’ திரைப்படத்தின் மூலமா இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து  நாச்சியார் ,தாரதப்பட்டை, பரதேசி ,அவன் இவன், நான் கடவுள், பிதாமகன் நந்தா போன்ற பல படங்களை  இயக்கியுள்ளார்.

6.வெற்றிமாறன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் மூலமாக  இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.இவர் ஆடுகளம்,விசாரணை,வட சென்னை,அசுரன்,பாவக்கதைகள்
,விடுதலை பாகம் 1,2 போன்ற  பல படங்களை இயக்கியுள்ளார்.

5.பாலு மகேந்திரா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா. இவர் ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இவர்  தமிழில் மூடுபனி ,மூன்றாம் பிறை, தலை முறைகள், வீடு ,சத்தியராகம், வண்ண வண்ண பூக்கள், ரெட்டைவால் குருவி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

4.பாரதிராஜா:

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர்  இயக்குனர் பாரதிராஜா. இவர் ’16 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமார்.அதை தொடர்ந்து  கிழக்கே போகும் ரயில், மீண்டும் ஒரு மரியாதை, நம்ம வீட்டு பிள்ளை ,அன்னக்கொடி ,ஆயுத எழுத்து,  போன்ற பல  படங்களை இயக்கியுள்ளார்.

3.ஜே மகேந்திரன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜே மகேந்திரன். இவர் ‘முள்ளும் மலரும்’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதை  தொடர்ந்து  உதிரிப்பூக்கள்,  கள்ளர். ஊர் பஞ்சாயத்து,  நெஞ்சை கிள்ளாதே, போன்ற பல படங்களில் இயக்கியுள்ளார்.

2.கே பாலச்சந்தர்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர்  மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தர். இவர் ‘நீர்க்குமிழி’ என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அபூர்வராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி,  போன்ற பல படங்களை இயக்கியுள்ளர்.

1.மணிரத்தினம்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்  இயக்குனர் மணிரத்தினம். இவர்’பல்லவி அனுபல்லவி’  என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானர்.இவர் தமிழில் மௌன ராகம் ,நாயகன் ,ரோஜா, உயிரே உயிரே, பொன்னியன் செல்வன், அலைபாயுதே,  ஆயுத எழுத்து, திருடா திருடா, தளபதி , போன்ற பல படங்களை இயக்கியுள்ளர்.