“கறிக்கடையில் கூட இப்படி வெட்ட மாட்டாங்க”…. 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்?… சட்டசபையில் பொங்கி எழுந்த உதயநிதி… அலறிய பேரவை….!

By Nanthini on புரட்டாதி 3, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நாளுக்கு நாள் சீர்குலைந்து வரும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை குறித்து அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நாள்தோறும் செய்தித்தாள்களைத் திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற செய்திகளே நிறைந்துள்ளதாகக் சுட்டிக்காட்டிய அவர், “கறிக்கடைகளில் கூட இவ்வளவு வெட்ட மாட்டார்கள், அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தினசரி வெட்டு குத்து சம்பவங்கள் அஞ்சாமல் நடந்து கொண்டிருக்கின்றன” என்று மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டினார்.

நாட்டில் நடைபெறும் தொடர் குற்றச் சம்பவங்களைக் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்ட உதயநிதி, நகைக்காகக் கொலை, போதைப்பொருள் விற்பனையைத் தட்டிக்கேட்பவர்கள் மற்றும் அம்பலப்படுத்துபவர்கள் மீதான தாக்குதல், மதுபோதையில் நடக்கும் மோதல்கள் எனத் தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாளே இல்லை என்ற அவலநிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கோவை மாவட்டத்தில் 9 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பதாகவும், தற்போதைய ஆட்சி அமைந்த இந்த 116 நாட்களில் சுமார் 10 ஆணவக் கொலைகள் அரங்கேறியுள்ள போதிலும் முதலமைச்சர் இதுகுறித்துப் பேசாமல் மௌனம் காப்பதாகச் சாடினார்.

   

தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு குறித்துப் பேசியவர்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பொறுப்பேற்காமல் தனிநபர் ஒழுக்கம் குறித்துப் பாடம் எடுப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத்தைக் கடுமையாகக் விமர்சித்தார். குற்றவாளிகள் மீதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீதும் அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையை முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.