“பதவியை ராஜினாமா பண்ணுங்க”… துப்பாக்கி முனையில் தவெக-வில் இணைய மிரட்டலா?…. அனிதா ராதாகிருஷ்ணன் கிளப்பிய அணுகுண்டு….!

By Nanthini on ஆடி 21, 2026

Spread the love

திமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சுற்றி எழுந்துள்ள அண்மைக்கால அரசியல் சர்ச்சைகள் தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. உங்களை யாராவது ராஜினாமா செய்ய வற்புறுத்தினார்களா என்ற கேள்விக்கு, “பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணையச் சொல்லும் திறன் அவர்களுக்குக் கிடையாது” என அண்மையில் கைதான திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உறுதியாக மறுத்து பதிலளித்துள்ளார்.

அதேநேரத்தில், இதற்கு நேர்மாறாகக் கருத்து தெரிவித்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன், ரூரல் DSP சுதீர் மற்றும் அவருடன் சபாரி உடையில் வந்த மற்றொரு நபர், தம்மை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெகவில் இணையுமாறு மிரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்; ஒரே விவகாரத்தில் இரு வேறு திமுக பிரபலங்கள் தெரிவித்துள்ள இந்த முரண்பாடான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.