என்னது, பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க இருந்தது இந்த 2 நடிகைகள் தானா.? வைரலாகும் ஒத்திகை புகைப்படங்கள்..

By Ranjith Kumar on மார்ச் 16, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர் படத்தில் நடிக்க சென்றால் குறைந்தது இரண்டு வருடமாவது ஆகிவிடும் என்ற இக்கட்டை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

   

2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்குனராக அறிமுகமான படம் பொல்லாதவன். ஒரு மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பைக் வந்து என்னன்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை வித்தியாசமன பின்னணியில் சொல்லியிருப்பார். இந்த படத்துக்கு அவர் முதலில் வைத்த டைட்டில் பொல்லாதவன் இல்லை. இரும்புக்குதிரை என்ற டைட்டிலைதான் வைத்துள்ளார். வெற்றிமாறன் ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன பெயரை அப்படியே பட பெயராக வைத்த தனுஷ் மற்றும் தயாரிப்பாளர். இப்படம் மூலம் தான் திரை உலகிற்கு மிகப் பிரபலமானவர் திவ்யா சப்னா.

   

ஆனால் இப்படத்தில் முதல் முதலாக இவருக்கு பதில் வேற ஹீரோயின்களை தான் வைப்பதாக முடிவு செய்துள்ளார்கள். ஆனால் சில பல காரணத்தால் அவர்கள் தட்டிப் போக இவர் ஹீரோயினாக இப்படத்தில் அமைந்து விட்டார். முதலில் காஜல் அகர்வால் அவர்களை தான் ஹீரோயினாக வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

 

அந்த சமயத்தில் காஜல் அகர்வால் பிஸியாக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருந்ததால், இன்னொரு பிரபல ஹீரோயினான பூனம் பாஜ்வாள் அவர்களை ஹீரோயினாக அமைக்க வெற்றிமாறன் எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால் சில பல காரணங்களினால் இவர்கள் இருவருமே பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் தட்டிப் போக, அந்த இடையில் பூந்தவர் தான் திவ்யா சப்னா.

ஆனால் இவர் தனுசு உட நடித்த பின் தான் பொல்லாதவன் மாபெரும் இடத்தைப் பிடித்தது என்று கூறலாம். தற்போதைய திவ்யா அவர்கள் நடித்த பின் தான் இப்படத்திற்கு மவுஸ் கூடியது. இதற்கு அப்புறம் தான் திவ்யாசப்னா அவர்களுக்கு ரசிகர் பட்டாளமே பெருகியது. அதற்கு அடுத்ததாக தான் இவர் தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற பல படங்களில் நடித்த தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.

author avatar
Ranjith Kumar