Connect with us

என் பையன் ஜெயிக்கணும்.. எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.. மகனுக்காக கண்ணீர் விட்டு இயக்குனர் விக்ரமன்..!

CINEMA

என் பையன் ஜெயிக்கணும்.. எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க.. மகனுக்காக கண்ணீர் விட்டு இயக்குனர் விக்ரமன்..!

 

ஹிட் லிஸ்ட் படத்தின் நிகழ்ச்சியில் மகனைப் பற்றி பேசும் போது இயக்குனர் விக்ரமன் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் புது வசந்தம், பூவே உனக்காக, சூரிய வம்சம் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன் குடும்ப படங்களை எடுத்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர்.

   

இவரது மகன் விஜய் கனிஷ்கா இவர் தற்போது கதாநாயகனாக ஹிட் லிஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கின்றார். கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்நிலையில் இயக்குனர் விக்ரமன் மகன் நடிக்கும் திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கின்றார்.

ஆர்.கே செல்லுலாய்டு தயாரிப்பு நிறுவனம் மூலமாக இப்படத்தை தயாரிக்க அவரின் உதவி இயக்குனர்கள் கார்த்திக் மற்றும் சூரியக்கதிர் இப்படத்தை இயக்கியிருக்கின்றார்கள். இந்த திரைப்படத்தில் சரத்குமார், கௌதம் மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

நாளை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் கூட நடிகர் விஜயிடம் விஜய் கனிஷ்கா வாழ்த்து பெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. நேற்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இயக்குனர் விக்ரமன் கலந்து கொண்டு மகனை பற்றி பேசிக்கொண்டிருந்தார். பேசும்போதே அவருக்கு கண்ணீர் வந்துவிட்டது.

இதை பார்த்து அவரது மகன் விஜய் கனிஷ்காவும் அப்பாவை கட்டிப்பிடித்து அழ தொடங்கி விட்டார். இது பார்க்கும் பார்வையாளர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. மேலும் பேசி அவர் எனது படங்கள் வெளியாகும் போது கூட நான் இவ்வளவு பதட்டமாக இருந்தது கிடையாது. என் மகன் வெற்றி பெற வேண்டும் அதற்கு உங்க சப்போர்ட் கண்டிப்பாக வேண்டும் என்று கூறியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top