இயக்குனர் விஜய் மில்டன் கோலிசோடா திரைப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் பணியாற்ற ஆசைப்பட்டதாகவும் அது கடைசியில் நடைபெறாமல் போனது என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. சலீம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து நான், பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, காளி, கொலை, ரத்தம், எமன் கடைசியாக மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்து வருகின்றார். தற்போது மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மிலிட்டன் எழுதி இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கின்றார்.
சரத்குமார் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். மேலும் சரண்யா பொண்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்கள். சமீபத்தில் கூட இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். கோலி சோடா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான விஜய் மில்டன் சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் விஜய் மில்டனுடன் சேர்ந்து விஜய் ஆண்டனியும் கலந்து கொண்டு பேசியிருந்தார்.
அப்போது பேசிய இயக்குனர் தெரிவித்திருந்ததாவது: “:கோலி சோடா திரைப்படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டோம். ஆனால் ஒரு சில காரணங்களினால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. பிறகு மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படமே இவரை நினைத்து தான் நான் எழுதினேன். இந்த திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு விஜய் ஆண்டனி பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. மேலும் கதையை அவரிடம் கூறிய போது உடனே அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்” என்று பேசியிருந்தார்.