‘விடுதலை’ திரைப்படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?… அம்மாடி தலையே சுத்துதே…

By Begam on ஜூன் 2, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உள்ளார். ஏனென்றால் இவரின் இயக்கத்தில் வெளி வந்த பல திரைப்படங்கள் மெகாஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரியும் குவித்துள்ளது.

   

அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முதலாக வெளியாகிய ‘பொல்லாதவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவியது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் இவர் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம்  பல விருதுகளையும் வென்றது.

   

 

சமீபத்தில் இவர் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விடுதலை திரைப்படத்திற்காக வெற்றிமாறன் வாங்கி சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து  ரூபாய் 30 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.