கவியரசு கண்ணதாசன் புகழ்பெற்ற திரைப்பட பாடல் ஆசிரியர் மற்றும் கவிஞரும் ஆவார். தனது வாழ்நாளில் 4000 மேற்பட்ட கவிதைகள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்கள் கட்டுரைகள் பல எழுதியவர் கண்ணதாசன்.
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர் கண்ணதாசன். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தவர். சாகித்ய அகடமி விருதினை பெற்றவர் கண்ணதாசன்.
எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு அதிகப்படியான திரைப்பட பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானவைகள் தான். மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அத்தனை கருத்துக்களையும் தனது பாடல்களில் ரத்தின சுருக்கமாக எழுதிவிடுவார் கண்ணதாசன். அப்படி கண்ணதாசன் பாடல் எழுதும் போது ஒரு டைரக்டர் அவரிடம் போட்ட கண்டிஷன் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் சிவி ஸ்ரீதர். எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி அவர்களை வைத்து அதிகப்படியான வெற்றி படங்களை எடுத்தவர். 1967 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் முத்துராமன் கே ஆர் விஜயா நடித்த திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை. இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசனும் ஒரு பாடல் மட்டும் வாலியும் எழுதி இருப்பார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனவை.
இந்தப் படத்தின் பாடல் கம்போசிங் போது டைரக்டர் ஸ்ரீதர் கண்ணதாசன் அவர்களிடம் காதலை பற்றி இரண்டே வரிகளில் சொல்ல வேண்டும் என்று கண்டிஷன் போட்டாராம். உடனே எதைப் பற்றியும் யோசிக்காத கண்ணதாசன் முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கண்ணம் சந்தித்த வேளையில் சந்திக்கவில்லை தந்து விட்டேன் என்னை என்று உடனே எழுதி கையில் கொடுத்து விட்டாராம். இதை கண்டதும் இயக்குனர் ஸ்ரீதர் மிகவும் சந்தோஷப்பட்டிருக்கிறார். அவரின் உதவியாளர் கண்ணதாசன் அவர்கள் காலில் விழுந்தே வணங்கி இருக்கிறார். அத்தனை திறமை வாய்ந்தவராக கண்ணதாசன் திகழ்ந்திருக்கிறார்.