நடிகர் சாருஹாசனின் மகளும், இயக்குநர் மணிரத்தினத்தின் மனைவியுமான நடிகை சுஹாசினி தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்ற தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய தந்தையை பொறுத்தவரை நடிப்பில் கேஸ்டிங் என்பது ரொம்ப முக்கியம். உதிரிப்பூக்கள் படம் பண்ணும் போது கூட ரொம்ப சோகமா இருக்கிற ஒரு பெண்ணை தான் ஹீரோயினியா நடிக்க வைக்க தேடிட்டு இருந்தாரு.
அவர் கிட்ட இருந்த சில புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது தான் அஸ்வினியை பார்த்ததும் அவர் நடிச்சா இந்த படம் பண்றேன் இல்லனா நான் பண்ணவே இல்லை என்று சொன்னாரு. அதனைப் போலத்தான் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் கதை எல்லாம் ரெடியாகி சூட்டிங் நெருங்கிக் கொண்டு இருந்தது. படம் தொடங்குவதற்கு முன்பே சுகாசினி துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். ரஜினியின் ஜானி படத்தில் தான் துணை ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றினார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. எந்த ஹீரோயினியும் செட் ஆகாததால் இறுதியாக சுகாசினி மாதிரி ஒருத்தர் கிடைச்சா நல்லா இருக்கும் என்று மகேந்திரனுக்கு யோசனை வந்தது.
அப்போது ஊட்டியில் இருந்த ஒரு கடையில் வெட்டிங் டிரஸ் வாங்கிட்டு வந்து ஹாசினிக்கு போட்டுவிட்டு ஓடுங்கள் என்று சொன்னாங்க. அங்க என்ன நடக்குது என்பது கூட சுகாசினிக்கு அப்போ தெரியாது. அந்தப் பக்கமோ இந்தப் பக்கமோ ட்ரெஸ்ஸ போட்டுட்டு ஓடினதும் அவங்க தான் ஹீரோயின் என்று மகேந்திரன் முடிவு பண்ணிட்டாரு. இதற்கு சம்மதம் தெரிவிக்காத சுகாசினி எங்க வீட்டுக்கு வந்து என்னால இதெல்லாம் பண்ணவே முடியாது அப்படின்னு சொல்லி அழுதுட்டாங்க. இல்ல நீ தான் கட்டாயம் பன்னியாகணும் இந்த படத்துக்கு நீ தான் ஹீரோயின் என்று மகேந்திரன் சொல்லிட்டாரு.
ஒரு வழியா சமாதானப்படுத்தி அவர நடிக்கிறதுக்கு மகேந்திரன் ஒப்புக்கொள்ள வைத்தார். அது மட்டுமல்லாமல் சுகாசினி சார் நீங்க சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக இந்த ஒரு படம் மட்டும் தான் நடிப்பேன் அதுக்கப்புறம் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் சுகாசினி மெல்ல மெல்ல சினிமாவில் வளர்ந்து முன்னணி ஹீரோயின் இடத்தை பிடிச்சாங்க. எங்க அப்பாவ பொறுத்த வரைக்கும் யாரோ வேணாலும் நடிக்க வச்சிரலாம் என்று நினைக்க மாட்டார். அவரு கேஸ்டிங் ரொம்ப முக்கியமா பார்த்தாரு என்று ஜான் மகேந்திரன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.