MBBS மற்றும் நர்சிங் முடித்தவரா நீங்க?… ரூ. 56,100 வரை சம்பளம்… மத்திய அரசின் அணுசக்தித் துறையில் நேரடி வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

By Muthu Mani on சித்திரை 17, 2026

Spread the love

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாக (NFC) மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், ராஜஸ்தான் மாநிலம் ராவத்பாட்டா மற்றும் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு, மருத்துவத் துறையில் அரசுப் பணி தேடுபவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாகும்.

பணியிடங்களைப் பொறுத்தவரை, மருத்துவ அதிகாரி (Scientific Officer) பதவிக்கு 3 இடங்களும், செவிலியர் (Nurse) பதவிக்கு அதிகபட்சமாக 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர அறிவியல் உதவியாளர் (2 இடங்கள்), பார்மசிஸ்ட் மற்றும் எக்ஸ்ரே டெக்னீசியன் (தலா 1 இடம்) ஆகிய பணியிடங்களும் இதில் அடங்கும். பணிகளுக்கு ஏற்ப மாதச் சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 21,700 முதல் அதிகபட்சமாக ரூ. 56,100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி இதர சலுகைகளும் ஊழியர்களுக்குக் கிடைக்கும்.

   

கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப எம்பிபிஎஸ் (MBBS), பி.எஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் (GNM), பி.எஸ்சி ரேடியோகிராபி, டி.பார்ம் மற்றும் டிஎம்எல்டி போன்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மருத்துவக் கவுன்சில்களில் முறையாகப் பதிவு செய்திருப்பது அவசியமாகும். வயது வரம்பு 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்; இருப்பினும், அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

   

தகுதியான நபர்கள் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவர். ஆர்வமுள்ளவர்கள் www.nfc.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 18, 2026 ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.