“15 எம்.எல்.ஏ-க்களா அல்லது நிர்வாகிகளா?”…. திடீரென பல்டி அடித்த செங்கோட்டையன்…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

By Nanthini on ஐப்பசி 17, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து 15 பேர் வரவுள்ளதாகத் தான் கூறினேனே தவிர, 15 எம்.எல்.ஏ-க்கள் வருவார்கள் என்று தான் குறிப்பிடவில்லை என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது செங்கோட்டையன் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அதிமுகவில் இருந்து விலகும் எண்ணம் தங்களுக்குப் சுத்தமாக இல்லை என்று எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே செங்கோட்டையன் தனது முந்தைய கருத்திலிருந்து பின்வாங்கி இவ்வாறு பேசியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கட்சியின் ஒற்றுமையைச் சோதிக்கும் வகையில் வெளியான இந்தத் தகவல்கள், எதிர்க்கட்சிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன.