திரையுலகிற்கு வருவதற்கு முன்னர் நடிகை வாணி போஜனை பாத்திருக்கீங்களா?… அப்பவே எவ்ளோ அழகு!!… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகை வாணி போஜன் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தெய்வமகள், ஆஹா , மாயா, லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவர் சினிமா நடிகை ஆனால் வரவேற்பு கிடைக்கும் என்று பேசப்பட்ட நிலையில், 2019ல் வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். இவர் தற்பொழுது தனது ரசிகர்களால் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்று அழைக்கப்படுகிறார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மிரள்’  திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாராட்டையும் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவர் லவ், குருவி, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

 

நடிகை வாணி போஜன் சீரியல்களில் நடித்ததன் மூலமே பிரபலமானார். அப்படி பிரபலமாவதற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை வாணி போஜனா இது? எவ்ளோ அழகா இருக்காங்க’  கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…..