தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் நடிகர் சஞ்சீவின் மகளை பாத்திருக்கீங்களா?… எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

நடிகர் சஞ்சீவ் தனது மகள், மகன் மற்றும் மனைவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மற்றும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் நடிகர் சஞ்சீவ். இவர் தளபதி விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். ஆரம்பகாலத்தில் விஜயுடன் இணைந்து ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து திரைப்பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் வந்த நடிகர் சஞ்சீவ் ‘திருமதி செல்வம்’ சீரியல் மூலம் முழு நேர சீரியல் நடிகராகவே மாறிவிட்டார்.
நடிகர் சஞ்சீவ் திருமதி செல்வம், மெட்டி ஒலி, யாரடி நீ மோகினி, கண்மணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல பத்ரி, சாமி 2, அன்பறிவு ,யானை என வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
நடிகர் சஞ்சீவ் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லயா என்ற மகளும், ஆதாம் என்ற மகனும் உள்ளனர். பொம்மலாட்டம், பந்தம், ஆண்டாள் அழகர் போன்ற பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சீவ் மனைவி பிரீத்தி.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்….