“பிக்பாஸ் ஒரு ரூல்ஸ் வைச்சாரு, அந்த ரூல்ஸ் படி நீங்க விளயாடல”…. கமல் தடாலடி, கண்ணீர் சிந்திய தனலட்சுமி….

By Archana

Published on:

தமிழ் பிஸ் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சில வாரங்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த வாரம் ஸ்வீட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் தமக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. தங்களுடைய அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று விழுந்து பிரண்டு , சண்டை போட்டு போட்டியாளர்கள் செய்த அனைத்தயும் நாம் பார்த்தோம்.

   

இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியில் செல்வார் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ராம், மஹாலக்ஷ்மி உள்ளிட்ட ஒரு சிலர் nominate ஆனார்கள், யார் வெளியேறுவர் என்று பொறுத்து தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் ஹாசன் அவர்கள், “பிக்பாஸ் ஒரு ரூல்ஸ் வைச்சாரு, அந்த ரூல்ஸ் படி நீங்க விளயாடல”, இதனால இந்த வெற்றி உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு நேர்மையாக விளையாடிய விக்ரமனுக்கு அது கொடுக்கப்படுகின்றது” என்று கூறுகிறார். இதோ அந்தப் ப்ரோமோ..

author avatar
Archana