CINEMA
3 கோடி நஷ்டத்துக்கு நானும், எனது மகனுமா காரணம்..? மேடையில் கே.ராஜனை கலாய்த்த தேவா.. சிரிப்பலையில் மூழ்கிய அரங்கம்..!!
பிரபல இசையமைப்பாளரான தேவா கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீசான மனசுக்கேத்த திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு வைகாசி பொறந்தாச்சு, அண்ணாமலை, ஊர் மரியாதை, உனக்காக பிறந்தேன், செந்தூரப்பாண்டி, மூன்றாவது கண், பாட்ஷா, காதல் கோட்டை, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.ராஜன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நான் பிரபுதேவா மீனாவை வைத்து டபுள்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்தேன். அந்த படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.
அந்த படத்தில் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தேன். அதுதான் அவருக்கு முதல் படம். அதன் பிறகு பார்த்திபன், தேவயானியை வைத்து நினைக்காத நாளில்லை படத்தை எடுத்தேன். அந்த படத்தை ஏஎ.ல் ராஜா இயக்கினார். நினைக்காத நாளில்லை படத்தில் என் அன்பு தம்பி தேவாவை மியூசிக் டைரக்டராக போட்டேன். நான் 9 கோடி ரூபாய் பணத்தை போட்டு எடுத்த மூன்று படங்கள் 3 கோடி ரூபாய் நஷ்டமானது.
சிறிய பட்ஜெட் என்பதால் சிறிய நஷ்டம். பெரிய பட்ஜெட் படம் என்றால் பெரிய நஷ்டம் என பேசியுள்ளார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தேசிய தேவா கே.ராஜன் பேசியதே கூறியதை குறிப்பிட்டு படம் நஷ்டம் என்றால் சரி. ஆனால் என்னையும் என் மகன் பெயரையும் சொல்லிவிட்டு நஷ்டம் எனக் கூறினீர்களே. நீங்கள் சொன்ன இடம் தவறு என கலாய்க்கும் விதமாக பேசினார். இதனை கேட்டு மேடையில் இருந்த அனைவரும் கைதட்டி சிரித்தனர்.