கணவன் இறந்ததும் மாறிய பேச்சு… வேலை கிடைத்ததும் மாமியாரைக் கழற்றிவிட்ட மருமகள்… நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஷாக்…!

By Swetha on ஐப்பசி 3, 2026

Spread the love

கணவனின் மறைவுக்குப் பிறகு, கருணை அடிப்படையில் வேலை பெற்ற பெண் ஒருவர், தனது மாமியார் பராமரிப்புக்காக மாதச் சம்பளத்தில் 25 சதவீதத் தொகையை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு கணவர் இறப்பிற்குப் பின் கிடைத்த இந்த அரசுப் பணியைப் பெறும்போது, தனது மாமனார் மற்றும் மாமியாரைப் பாதுகாத்து பராமரிப்பதாக அப்பெண் உறுதியளித்திருந்தார்.

இருப்பினும், வேலை கிடைத்த பிறகு அப்பெண் தங்களைக் கவனிக்காமல் கைவிட்டுவிட்டதாகக் கூறி, மாமியார் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. இ வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலை நியமனத்தின் போது அளித்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி, மாமியாரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது அப்பெண்ணின் கடமை என்பதைத் தெளிவுபடுத்தியது.

   

இதனடிப்படையில், அப்பெண்ணிற்கு வழங்கப்படும் மாதச் சம்பளத்தில் 25% தொகையை ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்து, மாமியாரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.