“பாட்டியை பாத்துக்கணும்…” மருமகளை ரூமில் அடைத்து காம கொடூரனுக்கு இரையாக்கிய மாமியார்…. ஆபாச வீடியோவை லீக் செய்வதாக மிரட்டிய ஓனர்… கடைசியில் நடந்த அதிரடி சம்பவம்…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

பெங்களூருவின் சஞ்சய் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த பெண் ஒருவரிடம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வயதான பாட்டி ஒருவரைப் பராமரிக்கும் பணி காலியாக இருப்பதாக அவரது மாமியார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மாமியாரின் வார்த்தையை முழுமையாக நம்பிய அப்பெண்ணும் வேலைக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவே, அவரையே நேரடியாக அழைத்துச் சென்று குறிப்பிட்ட வீட்டில் மாமியார் தங்க வைத்துள்ளார். ஆனால், அங்கு வந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த மனோஜ் என்பவர், பெண் தங்கியிருந்த அறைக்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்து அவருக்குக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த அநீதியைக் கண்டு கூச்சலிட்டும், வீட்டின் உரிமையாளரான பிந்து என்பவர் அதைக் கண்டுகொள்ளாமல் மனோஜிடமிருந்து பெருந்தொகையைப் பணமாகப் பெற்றுக்கொண்டு அமைதி காத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளிக்க முயன்றபோது, அறையில் எடுக்கப்பட்ட ஆபாசக் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி வாழ்க்கையைச் சீரழித்து விடுவதாகப் பிந்து மிரட்டியுள்ளார். மேலும், இந்தச் சதித் திட்டத்திற்குத் தனது மாமியாரும் உடந்தை என்பதை அறிந்து நிலைகுலைந்த அப்பெண், நாளுக்கு நாள் கொடுமைகள் அதிகரிக்கவே வேறு வழியின்றித் தனது உறவினர்களிடம் கண்ணீருடன் உண்மைகளைக் கூறியுள்ளார். உறவினர்களின் துணையோடு மானந்தவாடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மருமகளைக் காம மிருகத்திற்குப் பலிகடாவாக்கிய மாமியார், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மனோஜ் மற்றும் இடைத்தரகராகச் செயல்பட்ட பிந்து ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.