திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே, 90 வயது மாமியாரைச் சந்தேகத்தின் பேரில் மருமகளே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (90). இவரது கணவர் அருணாசலம் மற்றும் மகன் பழனி ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், வெள்ளையம்மாள் தனது 60 வயது மருமகள் வசந்தாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வெள்ளையம்மாள் தனது வீட்டில் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
வீட்டில் இருந்த மருமகள் வசந்தாவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவரே தனது மாமியாரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வசந்தா வேலை நிமித்தமாகவோ அல்லது விசேஷங்களுக்கோ சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பச் சற்று தாமதமானால், வெள்ளையம்மாள் அவரைத் தேவையற்ற முறையில் சந்தேகப்பட்டுத் திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
கொலை நடந்த தினத்திற்கு முன்தினம், வெள்ளையம்மாள் மருமகளின் நடத்தையைச் சந்தேகப்பட்டு மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற வசந்தா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாமியாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வசந்தாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் கொக்கிரகுளம் மகளிர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…
நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…
வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…