அஜித்தால் மாறிய என் வாழ்க்கை.. நா அத மறக்கணும்னு நெனச்சாலும் முடில.. மனம் திறந்த இசை அமைப்பாளர் இமான்..

By Sumathi on ஜனவரி 25, 2024

Spread the love

இசையமைப்பாளர் டி இமான் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர். அவரது இசையில் வந்த பல நூற்றுக்கணக்கான பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாக இன்றும் கொண்டாடப்படுகின்றன.தமிழ் சினிமாவில் இசைத்துறையில் ரசிகர்களால் கொண்டாடப்படுகிற இசையமைப்பாளர்களின் டி இமானும் மிக மிக முக்கியமானவர். இவர் பல பாடல்களையும் பாடி இருக்கிறார்.

   

தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டி இமான், விசில் படத்துக்கு பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கும்கி, மனம் கொத்திப் பறவை, மைனா, மருதமலை, நான் அவன் இல்லை, போகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, விஸ்வாசம், நம்ம வீட்டுப்பிள்ளை என பாடல்கள் கொண்டாடப்பட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் டி இமான்.

   

 

சில மாதங்களுக்கு முன், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என ஒரு நேர்காணலில் வெளிப்படையாகச் பரபரப்பை ஏற்படுத்தியவர் டி இமான். இது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் இதுவரை விளக்கமோ, பதிலோ தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இசையமைப்பாளர் டி இமான் தன் முதல் மனைவியை பிரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டி இமான் கூறியதாவது, எனது சினிமா இசை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் விஸ்வாசம். இந்த படத்தில் இடம்பெற்ற பாடலுக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் கண்ணான கண்ணே பாடல் என் சொந்த வாழ்க்கையுடன் தொடர்புடையாக இருக்கிறது. அந்த படத்தில் அஜீத் தனது மகளை பிரிந்து தவிப்பது போன்ற ஒரு தவிப்பான மனநிலையில்தான் நானும் இருக்கிறேன்.

அதனால் சில இடங்களில் அந்த பாடலை கேட்கும்போது எனக்குள் மிகப்பெரிய தாக்கமும், வருத்தமும் ஏற்படும். நான் இசையமைத்த அந்த பாடலே என்னை காயப்படுத்துகிறது. ஏனெனில் அப்பா – மகளுக்குள் உள்ள தனித்துவமான பாசத்தை, அன்பை அந்த பாடல் உணர்வுகளால் வெளிப்படுத்தும். அதனால் என்னை அந்த பாடல் தொந்தரவு செய்யும். பல நேரங்களில் அதனால் அந்த பாடலை தவிர்க்க முயற்சிப்பேன். ஆனால் சமூக வலைதளங்களில் ரீல்ஸ், வீடியோ செய்து பலரும் வைரலாக்குகின்றனர். அதனால் அடிக்கடி அந்த பாடல் எனக்குள் வந்துவிடுகிறது என்று கூறியிருக்கிறார் இசையமைப்பாளர் டி இமான்.

author avatar
Sumathi